இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரம சிங்கவின் பிரான்ஸ் விஜயத்துக்கு எதிராக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
நேற்று வெள்ளிக்கிழமை இலங்கைத் தூதரகம் அமைந்துள்ள பாரிஸ் டோப்பைன் பகுதியில் பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாகி மாலை 5 மணிவரை இடம்பெற்றது.
பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் தமிழீழ மக்கள் பேரவை ஆகியவற்றின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த எதிர்ப்பு நிகழ்வில் பதாதைகளை ஏந்தியவாறு இளையோர்கள் பலரும் குரல் எழுப்பியிருந்தனர். பிரெஞ்சு மற்றும் தமிழ் மொழியிலான உரைகளும் இடம்பெற்றன.
நேற்று முன்தினமும் இவ்வாறான எதிர்ப்பு நிகழ்வொன்று பாரிஸ் ப்ளேஸ் டி லா ரிபப்ளிக் பகுதியிலும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.