அவுஸ்திரேலியாவின் தலைநகரில் மாஸ்கோ புதிய தூதரகத்தை கட்டுவதற்காக திட்டமிட்டிருந்த நிலத்தை கைப்பற்ற எண்ணிய ரஷ்யாவின் முயற்சியை அவுஸ்திரேலியாவின் உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
இந்த மாத நடுப்பகுதியில் அவுஸ்திரேலிய அரசாங்கம் தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக ரஷ்யாவின் குத்தகையை ரத்து செய்திருந்தது.
பாராளுமன்றத்தில் இருந்து வெறும் 400 மீற்றர் தொலைவில் இருப்பதால் திட்டமிடப்பட்ட தூதரகம் உளவு பார்க்கும் அபாயத்தை ஏற்படுத்தியதாக அவுஸ்திரேலிய நிபுணர்கள் தெரிவித்தனர்.
நீதிமன்ற தீர்ப்பையடுத்து, அந்த இடத்துக்கு அருகே போராட்டத்தில் அமர்ந்திருந்த ரஷ்ய தூதரக அதிகாரி ஒருவர் தீர்ப்புக்குப் பிறகு, அவ்விடத்திலிருந்து தூதரக காரில் புறப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ரஷ்யாவின் தற்போதைய தூதரகம் அவுஸ்திரேலியாவின் கான்பெராவில் உள்ள கூட்டாட்சி பாராளுமன்ற கட்டிடத்திலிருந்து சிறிது தொலைவில் உள்ளது.
மாஸ்கோ 2008 இல் புதிய தளத்திற்கான குத்தகையை வாங்கியதோடு, 2011 இல் அதன் புதிய தூதரகத்தை அங்கு கட்டுவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
இருப்பினும், இந்த ஆண்டு ஜூன் 15 அன்று, ஆஸ்திரேலியாவின் பாராளுமன்றம் குத்தகையை நிறுத்துவதை நோக்கமாகக் கொண்ட புதிய சட்டங்களை அமுல்படுத்தியிருந்தது.
இது தொடர்பில் ரஷ்ய தூதரகத்தினரால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட புகாரில், ஏற்கனவே கட்டுமானப் பணிக்காக 8.2 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்ததோடு, தடை உத்தரவு பிறப்பிக்கும் பட்சத்தில், பகுதியளவு கட்டி முடிக்கப்பட்ட கட்டிடத்தின் ஒருமைப்பாடு பாதிக்கப்படும் என்று ரஷ்யா தெரிவித்தது.
ஆனால் அவுஸ்திரேலியாவின் உயர் நீதிமன்றம், ரஷ்யாவின் குறித்த புகாரை ஏற்றுக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.