லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய இந்த விலை குறைப்பு நடவடிக்கையை ஜூலை மாதம் முதல் வாரத்தில் குறைக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் எரிவாயு விலை சூத்திரத்தின் அடிப்படையில் விலைகள் குறைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஜுன் மாதம் 04 ஆம் திகதி சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டது.
இதற்கமைய 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு 452 ரூபாவால் குறைக்கப்பட்டு 3186 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.
5 கிலோகிராம் நிறைகொண்ட லிட்ரோ சமையல் எரிவாயு 181 ரூபாவால் குறைக்கப்பட்டு 1281 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.
அத்துடன் 2.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு 83 ரூபாவால் குறைக்கப்பட்டு 598 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.