கடனட்டைகளுக்கான வட்டி வீதத்தை குறைப்பதற்கு சில வர்த்தக வங்கிகள் இணங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் முதலாம் திகதியிலிருந்து இந்த நடைமுறை அமுலாகும் எனவும் அந்த தகவல்கள் குறிப்பிடுகின்றன.
அத்துடன், உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைக்கு அரசாங்கம் தயாராகி வரும் நிலையில் இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.