தரம் 8 இல் கல்வி பயிலும் மாணவன் ஒருவரை அதே பாடசாலையைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் தாக்கியுள்ள சம்பவம் முல்லைத்தீவு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முல்லைத்தீவு கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் விவசாய பாடத்தை கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரே இவ்வாறு மாணவனை தாக்கியுள்ளார்.
குறித்த மாணவனை குறித்த ஆசிரியர் மண்வெட்டியை எடுத்து வருமாறு கூறிய நிலையில் மண்வெட்டியை குறித்த மாணவன் எடுக்காமால் மற்றைய மாணவன் எடுத்ததால் குறித்த மாணவனை ஆசிரியர் மூர்க்கத்தனமாகத் தாக்கியுள்ளார்.
தாக்குதலில் காயம் அடைந்த மாணவனை முல்லைத்தீவு வைத்தியசாலையில் அனுமதித்த பெற்றோர் பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்துக்கு முறைப்பாடு வழங்கியதை அடுத்து குறித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதை தொடர்ந்து குறித்த ஆசிரியருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.