யுத்த வெற்றி நாயகர்கள் எனும் மகுடத்தைச் சூடிக்கொள்ள ராஜபக்ஷக்களுக்கு எந்த அருகதையும் கிடையாது என முன்னாள் இராணுவ தளபதி பீல்ட் மர்ஷல் சரத் பொன்சேகா ஆவேசம் வெளியிட்டுள்ளார்.
நாட்டின் பெரும் குற்றவாளிகளான ராஜபக்ஷக்களைப் பாதுகாப்பதற்காகவே ரணில் விக்ரமசிங்க முயற்சிக்கிறார் எனக் குற்றம் சாட்டியுள்ளார்.
கொழும்பில் செய்தியாளர்களை சந்தித்து கலந்துரையாடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
யுத்த வெற்றியின் பின்னர், ராஜபக்ஷக்கள் தங்கள் சுகபோக அரசியல் நலன்களுக்காக இந்த நாட்டின் வளங்களை விற்று அரச சொத்துக்களைக் கொள்ளையடித்ததோடு, நாட்டையே நாசமாக்கியவர்கள்.
இவ்வாற நாசகார செயல் புரிந்த ராஜபக்ஷக்களை மக்கள் முன்னிலையிலேயே கூண்டோடு தூக்கிலிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
- / இந்தச் செய்தியையும் பாருங்கள் – விஞ்ஞானி ஜான் குட்இனப் இயற்கை எய்தினார் /
இறுதிப் யுத்தத்திற்கு தலைமை தாங்கியவன் என்ற ரீதியிலும், முன்னாள் இராணுவத் தளபதி என்ற ரீதியிலும் இதை வெளிப்படையாகக் கூற எனக்கு உரிமை உண்டு எனவும் தெரிவித்துள்ளார்.
நாட்டை விற்ற ராஜபக்சக்களின் மோசமான செயல்களுக்கு மக்கள் அவர்களை கூண்டோடு அதிகாரத்திலிருந்து துரத்தியடித்தார்கள். இருப்பினும் இந்த தண்டனைகள் அவர்களுக்கு போதாது.
நாட்டு மக்கள் முன்னிலையிலேயே அவர்களை கூட்டோடு தூக்கிலிட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நிலையிலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் அவர்களைப் பாதுகாப்பதற்காக தேர்தல்களை நடத்த பயப்படுகிறார்.
தேசிய ரீதியில் தேர்தல் ஒன்று நடந்தால் ஐக்கிய மக்கள் சக்தியே ஆட்சிக்கு வரும். அவ்வாறு நடந்தால் ராஜபக்ஷக்களுக்கும் தனக்கும் அது பாதகமாக அமையும் என ரணில் பயப்படுகின்றார் எனவும் தெரிவித்துள்ளார்.
- / இந்தச் செய்தியையும் பாருங்கள் – உதவித்திட்டத்தில் முறைகேடு – வீதிமறியல் போராட்டத்தில் மக்கள்! /