கட்டளையை மீறி, வாகனத்தை செலுத்திய இளைஞன் ஒருவனை பிரான்ஸ் பொலிஸார் சுட்டுக்கொன்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
குறித்த சம்பவம் பாரிஸுக்கு வெளியே, நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் 17 வயதுடைய இளைஞன் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.
சம்பவ இடத்திலேயே குறித்த இளைஞனை உயிர்ப்பிக்க அவசர சேவைகள் மேற்கொண்டு முயற்சித்த போதும், அவர் சிறிது நேரத்தில் இறந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதனைத் தொடர்ந்து, இரவோடு இரவாக நடந்த போராட்டங்கள் மற்றும் கலவரத்தைத் தொடர்ந்து 15 பேர் கைது செய்யப்பட்டனர்.
மேலும், துப்பாக்கிச் சூடு நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட பொலிஸ் அதிகாரி கொலைக் குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூடு நடந்தபோது காரில் மேலும் இருவர் இருந்ததாகவும், அதில் ஒரு பயணி தப்பியோடியதாகவும், மற்றொருவர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.