ஸ்கொட்லாந்தை வீழ்த்தி சுப்பர் 6 க்கு நுழைந்தது இலங்கை அணி!

ஸ்காட்லாந்துக்கு எதிரான நேற்று இடம்பெற்ற உலகக் கிண்ண தகுதிச் சுற்று தொடரின் போட்டியில் இலங்கை அணி 82 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சுப்பர் 6 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 49.3 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 245 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பாக பெத்தும் நிஸ்ஸங்க 75 ஓட்டங்களையும், சரித் அசலங்க 63 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

246 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய ஸ்கொட்லாந்து அணி 29 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 163 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

துடுப்பாட்டத்தில் ஸ்கொட்லாந்து அணி சார்பாக கிறிஸ் க்ரீவ்ஸ் ஆட்டமிழக்காது 56 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.

பந்துவீச்சில் மஹீஷ் தீக்ஷன 3 விக்கெட்டுக்களையும் வனிந்து ஹசரங்க 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply