புத்தளத்தில் விபத்து – விஜயகலா மகேஸ்வரன் காயம்!

புத்தளத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் இன்று அதிகாலை 5.40 அளவில் இடம்பெற்றதாக காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் பயணித்த வாகனம்  வேகக்கட்டுப்பாட்டினை இழந்து வீதியை விட்டு விலகி மரமொன்றின்மீது மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காயமடைந்த அவர் உட்பட வாகனத்தில் பயணித்த ஏனைய நால்வரும் புத்தளம் வைத்தியசாலையின் அவசர விபத்து பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply