ஏழாலைப் பகுதியில் அமைக்கப்படும் தொலைத்தொடர்பு கோபுரத்திற்கு எதிராக மக்கள் போராட்டம் ஒன்று நாளை முன்னெடுக்கப்படவுள்ளது.
தொலைத்தொடர்புக் கோபுரம் அமைக்கப்பட்டு வரும் காணியின் வாயிலில் நாளை காலை 9.00 மணி முதல் மேற்கொள்ளப்படவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.
இது தொடாபில் மேலம் தெரியவருகையில்,
யாழ்ப்பாணம் – ஏழாலை தெற்கு, புளியங்கிணற்றடி வீதியில் பொதுமக்கள் நெருக்கமாக வாழும் பகுதியில் பொதுமக்களின் எதிர்ப்புக்கு மத்தியிலும் தொலைத்தொடர்பு கோபுரம் அமைக்கப்பட்டு வருகின்றது.
இதற்கு எதிர்பை வெளிப்படுத்தும் வகையிலேயே நாளை கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
குறித்த பகுதியில் அமைக்கப்பட்டு வரும் தொலைத்தொடர்புக் கோபுர வேலைத்திட்டங்களை தடுத்து நிறுத்துமாறு சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் மக்கள் முரைறப்பாடு வழங்கியும் இதுவரை அது தொடர்பில் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை தொலைத்தொடர்புக் கோபுர கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள நிறுவனத்தினருக்கு, மக்கள் குடியிரிப்பு பகுதியிலிருந்து வேறு பகுதியில் கோபுரத்தை அமைக்குமாறு கோரிக்கை விடுத்தும் அவர்களும் அது தொடர்பில் கவன் செலுத்தவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான நிலையிலேயே நாளைய தினம் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.