பிரபாகரன் கொல்லப்பட்டாரா என்பது எனக்கு தெரியாது! யாழில் மைத்திரி பகிரங்கம்

பிரபாகரன் கொல்லப்பட்டாரா என்பது எனக்கு தெரியாது, அது மேல் மட்டத்தை சேர்ந்தவர்களுக்கே தெரியும் அவர்களே அதை கட்டுப்படுத்தினர் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் யாழ். மாவட்ட அலுவலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (2) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோதே அவர் இதனை குறிப்பிட்டார்.

தொடர்ந்து கருத்துரைத்த அவர்,

“ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரபணு பரிசோதனை தொடர்பாக எனக்கு எதுவும் தெரியாது.

நான் இறுதி யுத்த காலத்தில் இரண்டு வாரங்களுக்கு மட்டுமே பதில் பாதுகாப்பு அமைச்சராக இருந்தேன். அதனால் எனக்கு அதைப் பற்றி எதுவும் தெரியாது. எனக்கு அதை பற்றி யாரும் எதுவும் சொல்லவில்லை “ எனக் குறிப்பிட்டார்.

 

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply