இஸ்ரேல் – இலங்கை நேரடி விமான சேவை விரைவில் ஆரம்பம்!

இஸ்ரேலுக்கும் இலங்கைக்குமிடையிலான நேரடி பயணிகள் விமான சேவை எதிர்வரும் ஒக்டோபர் முதல் ஆரம்பிக்கப்படும் என துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சு அறிவித்துள்ளது.

இது தொடர்பான விசேட கலந்துரையாடல் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் இரண்டு நாடுகளின் சிவில் விமான சேவை அதிகாரிகளின் பங்குபற்றலுடன் அண்மையில் இடம்பெற்றது.

இதன்படி, இஸ்ரேலின் டெல் அவிவில் இருந்து கட்டுநாயக்க வரை நேரடி பயணிகள் விமான சேவைகள் முதன்முறையாக ஆரம்பிக்கப்படவுள்ளன.

அத்துடன், இஸ்ரேலின் அகியா (Akia) விமான சேவைக்குச் சொந்தமான விமானங்கள் இலங்கைக்கான இந்த சேவைகளை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply