பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு ஜீவன் தொண்டமான் விடுத்துள்ள எச்சரிக்கை!

பெருந்தோட்ட தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டும் வகையிலும், அவர்களுக்கான தொழில் உரிமைகளை வழங்குவதற்கு மறுக்கும் வகையிலும் செயற்படும் பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஹட்டன் பெருந்தோட்ட யாக்கத்தின் நிர்வாகத்துக்குட்பட்ட தோட்டங்களில் நீண்ட காலமாக நிலவும் தொழில் பிணக்குகளுக்கு தீர்வை பெற்றுக் கொடுப்பதற்கான கூட்டமொன்று அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் கொழும்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமையகமான சௌமியபவனில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே அமைச்சர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

பெருந்தோட்ட தொழிலாளர்களின் உழைப்பை மாத்திரம் சுரண்டிக்கொண்டிருக்கும் தோட்ட நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க போவதாகவும், தீர்வை வழங்காவிட்டால் ஹட்டன் பெருந்தோட்ட யாக்கத்துக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் எச்சரித்துள்ளார்.

 

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply