சுனாமியால் சிதைந்த புகுஷிமா அணுமின் நிலையத்தில் இருந்து கழிவு நீரை கடலில் விடுவதற்கான ஜப்பானின் திட்டம் சர்வதேச தரத்திற்கு உட்பட்டது என ஐக்கிய நாடுகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த வெளியீடு சுற்றுச்சூழலில் மிகக் குறைவான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சர்வதேச அணுசக்தி நிறுவனம் தெரிவிக்கின்றது.
இதனிடையே அணு உலைகளை குளிர்விக்கப் பயன்படுத்தப்பட்ட நீர் சேமிப்பு இடம் இல்லாமல் ஃபுகுஷிமா வளாகம் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஜப்பானின் இந்த திட்டத்திற்கு சீனா மற்றும் தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
அதுமட்டுமல்லாது, இது தங்களின் நற்பெயருக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஜப்பான் உள்ளூர் மீனவ சமூகங்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
கடந்த 2011 இல், 9.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் உருவான சுனாமி புகுஷிமா ஆராய்ச்சி அணுமின் நிலையத்தின் மூன்று உலைகளை வெள்ளத்தில் மூழ்கடித்தது.
செர்னோபிலுக்குப் பிறகு உலகின் மிக மோசமான அணுசக்தி பேரழிவாக இது கருதப்படுகிறது.
அனர்த்தத்தையடுத்து, ஆலையைச் சுற்றியுள்ள பகுதியிலிருந்து 150,000 க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.