எரிபொருள், எரிவாயு வரிசைகள் காணப்படுவதும், மின்சாரம் துண்டிக்கப்படுவதையுமே பிரச்சினைகளாக மக்கள் புரிந்துகொண்டுள்ளனர் என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தி நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
இலங்கையின் பல வாக்காளர்களுக்கு வாக்களித்த பின்னர் நடக்கும் விடயங்களை புரிந்துக்கொள்ளவோ, சிந்திக்கவோ நேரமில்லை.
எரிபொருள், எரிவாயு வரிசைகள், மின் துண்டிப்பு என்பன இல்லாமல் போன பின்னர் பிரச்சினைகள் முடிந்து விட்டதாக எண்ணுகின்றனர்.
எனினும் மின்சாரத்தை துண்டிப்பதற்கு பதிலாக மக்களே தமக்கான மின்சாரத்தை துண்டித்துக்கொள்ளும் நிலைமையை அரசாங்கம் உருவாக்கியுள்ளது.
மின்சார கட்டணங்கள் அதிகரித்துள்ளதால், மக்கள் மின் பாவனையை குறைத்துக்கொண்டுள்ளனர் எனவும் சுனில் ஹந்துன்நெத்தி குறிப்பிட்டுள்ளார்.