சீரற்ற காலநிலையால் கண்டி பிரதான வீதியில் போக்குவரத்து தடை

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி பிரதான வீதியில் சீரற்ற காலநிலை நிலவுவதன் காரணமாக, பலத்த காற்று வீசுவதால், மரமொன்றும் , மின் கம்பமொன்றும் முறிந்து விழுந்துள்ளது.

இதனால் அவ்வீதியினூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளதுடன் அனைத்து வாகனங்களும் மாற்றுவழியூடாக பயணிக்கின்றன.

இன்று அதிகாலை ஒரு மணியளவில் குறித்த மரமும் , மின் கம்பமும் முறிந்து விழுந்துள்ளதாகவும், இதன்போது எவருக்கும் காயமேற்படவில்லை எனவும் நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து அப்பிரதேச வாசிகள் இணைந்து வீதியின் குறுக்கே வீழ்ந்த மரத்தினை வெட்டி அகற்றுவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

நுவரெலியா பிரதான நகருக்கு மின் இணைப்பை வழங்கும் கம்பம் முறிந்து விழுந்துள்ளமையால் பிரதான நகருக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் இப்பகுதிக்கு பொறுப்பான மின்சார சபைக்கு உடனே அறிவித்து பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு முறிந்த மின்கம்பத்தை மாற்றி ஏற்பட்டுள்ள பழுதை சரி செய்யவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அத்துடன் பொதுமக்களை மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு நுவரெலியா இடர் முகாமைத்துவ மத்திய நிலைய பணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply