சோள உற்பத்தியை அதிகரிப்பதற்காக புதிய நடவடிக்கை

அடுத்துவரும் பெரும்போகத்தில் சோளச் செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு நிலத்தைப் பண்படுத்துவதற்காக, ஏக்கருக்கு 20,000 ரூபா வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

அம்பாந்தோட்டை, மொனராகலை, அனுராதபுரம், அம்பாறை மற்றும் பதுளை மாவட்டங்களில் சோளம் பயிரிடும் விவசாயிகளுக்கு கடனற்ற முறையிலான பணமாக இதனை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

மேலும், சோளப் பயிர்ச்செய்கைக்குத் தேவையான விதைகளும் உரங்களும் இலவசமாக வழங்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கால்நடைகளுக்கான தீவன உற்பத்திக்குத் தேவையான சோள பற்றாக்குறையால் இந்த வருடத்தில் பால், முட்டை மற்றும் கோழி இறைச்சி உற்பத்தி குறைந்துள்ளதாகவும்,  அதன்பொருட்டு, சோள உற்பத்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply