வடக்கு கிழக்குக்கு என பொதுவான மேன்முறையீட்டு நீதிமன்றத்தை அமைக்க வேண்டும்!

வடக்கு கிழக்கு நீதிமன்றங்களின் மேற்கொள்ளப்படும் வழக்கு விசாரணைகள் மேன்முறையீட்டுக்கு வரும் போது தமிழ் நீதியரசர்கள் அதனை ஆராய வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

அல்லது வடக்கு கிழக்குக்கு என பொதுவான மேன்முறையீட்டு நீதிமன்றத்தை அமைக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று நாடாளுமன்றில் இடம்பெற்றுவரும் நீதிமன்றங்களில் நீதி விசாரணைகளில் தாமதம் மற்றும் அதற்கான காரணங்கள் தொடர்பான ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே சார்ள்ஸ் நிர்மலநாதன் இதனை தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கில் நீதிமன்றத்தில் இடம்பெறும் வழக்கு விசாரணைகளை மேன்முறையீட்டுக்காக கொழும்புக்கு வரும் போது அதற்கான மொழிபெயர்ப்பிற்கு மட்டும் இரண்டுவருட காலங்கள் செல்கிறதாக சார்ள்ஸ் நிர்மலநாதன் மேலும் தெரிவித்தார்.

ஆகவே, இவற்றியில் எதவு ஒன்றினை நடைமுறைப்படுத்துவதன் மூலம் நீதிமன்ற விசாரணைகளில் தாமதம் ஏற்படாது என சார்ள்ஸ் நிர்மலநாதன் சுட்டிக்காட்டியுள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply