யா/ அராலி இந்துக் கல்லூரியின் நுற்றாண்டு விழா

யாழ்ப்பாணம் அராலி இந்துக் கல்லூரியின் நுற்றாண்டு விழா நிகழ்வானது எதிர்வரும் ஜூலை 7, 8 ஆம் திகதிகளில், ஒரு மணியளவில் சொர்ணம் செல்லையா ஞாபகர்த்த அரங்கில், பாடசாலையின் அதிபரான திரு.பா.பாலகுமார் தலைமையில் இடம்பெறவுள்ளது.

ஜூலை 7 ஆம் திகதி இடம்பெறவுள்ள நுற்றாண்டு விழா நிகழ்வில், வலிகாம வலயக் கல்விப் பணிப்பாளர் திரு.க.பிறட்லி ஜெனாட் பிரதமவிருந்தினராகவும், மனிதவள சேவைத் திணைக்கள மென்பொருள் நிரலரான திரு.நெ.கணேசானந்தன், வலிகாம சமூக விஞ்ஞான சேவைக்கால ஆசிரிய ஆலோசகரான திரு.செ.பாஸ்கரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும், பழைய மாணவரும், யா/எழுதுமட்டுவாழ் ஸ்ரீ கணேச வித்தியால ஆசிரியருமாகிய திரு.கி. சிவானந்தன், பழைய மாணவரும், வடமாகாண கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தருமாகிய திரு.இ.சாந்தகுமார், பழைய மாணவரும், ஓய்வு பெற்ற ஆய்வுகூட உதவியாளருமாகிய திரு.தி.விக்னஜெயம் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகவும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

ஜூலை 8 ஆம் திகதி இடம்பெறவுள்ள நுற்றாண்டு விழா நிகழ்வில், வடமாகாண கல்விப் பணிப்பாளர் திரு.தி.ஜோன் குயின்ரஸ் பிரதமவிருந்தினராகவும், ஓய்வுபெற்ற வடமாகாண கல்விப் பணிப்பாளர் திரு.ப.விக்னேஸ்வரன், வயம்ப பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீட சிரேஷ்ட விரிவுரையாளர் திரு.தி.அருட்செல்வம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும், சங்கானை கோட்டக்கல்விப் பணிப்பாளர் திரு.சூ.நோபட் உதயகுமார், ஓய்வுபெற்ற அரச சித்த வைத்தியர் திரு.செ.பரமசிவம்பிள்ளை, சமூக மேம்பாட்டுக்கல்வி தகவல் தொழிநுட்பவியலாளர் திரு.ஜெர்றி ஜெனோர்ஜ் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகவும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

நடைபெறவிருக்கும் நூற்றாண்டு விழாவில் நூற்றாண்டு நினைவுக்கல் திரை நீக்கம் செய்தல்,நூற்றாண்டு விழா நூல் வெளியீடு, நூற்றாண்டு ஞாபகர்த்த மரக்கன்று வழங்கல் நிகழ்வு, பரிசில் வழங்கல் என்பனவும் இடம்பெறவுள்ளன.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply