தென் அமெரிக்கா நாடான மெக்ஸிக்கோவில் பயணிகள் பேருந்து விபத்துக்குள்ளானதில் 27 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 17 பேர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
ஓசாகாவில் மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட மீட்புப் குழுவினர் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அந்நாட்டு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.