இலங்கையில் ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த நடவடிக்கை எடுக்கப்படுமென கிழக்கு மாகாண ஆளுநரும், தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச் சங்க மாநிலத் தலைவருமான செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பாதுகாப்பு சங்க மாநில தலைவராகவுள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், திருச்சிக்கு சென்றிருந்த வேளை அவருக்கு அச்சங்கத்தின் திருச்சி மாவட்டம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
சங்கத்தின் தலைவா் ஒண்டிராஜ், மாநில செயலா் சூரியூர் ராஜா உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.
இதன்போது கருத்து தெரிவித்த செந்தில் தொண்டமான்,
இலங்கை அரசால் கைது செய்யப்படும் தமிழக மீனவர்களையும், அவர்களது படகுகளையும், இலங்கை அரசிடம் பேசி, மீட்டுக் கொடுக்கும் பணியை கடந்த 25 ஆண்டுகளாகச் செய்து வருகிறோம் எனத் தெரிவித்துள்ளார்.
தமிழர்களின் பாரம்பரியம், கலாசாரம் மற்றும் வரலாற்றுடன் தொடர்புடைய வீர விளையாட்டான ஐல்லிக்கட்டுப் போட்டியை இலங்கையிலும் நடத்த நடவடிக்கை எடுப்போம் எனவும் தெரிவித்தார்.