படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தராக்கி சிவராம் தொடர்பாக கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியம் – இலங்கை, சிவராம் ஞாபகார்த்த மன்றம் – சுவிஸ் ஆகியன இணைந்து தொகுத்துள்ள கட்டுரைகள் அடங்கிய ‘தராக்கி’ ஈழத் தமிழ் ஊடக முன்னோடி நூலின் வெளியீட்டு நிகழ்வு எதிர்வரும் 15ஆம் திகதி பிற்பகல் 3 மணிக்கு மட்டக்களப்பு வை.எம்.சீ.ஏ. மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இத்தொகுப்பில் ஊடகத்துறை ஆளுமைகள், நண்பர்கள், உறவுகள் என 41 பேர் எழுதிய கட்டுரைகள் உள்ளடங்குகின்றன.
நூல் வெளியீட்டைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், செல்வராசா கஜேந்திரன், இராசமாணிக்கம் சாணக்கியன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சேனாதிராஜா ஜெயானந்தமூர்த்தி, பாக்கியசெல்வம் அரியநேத்திரன் ஆகியோர் உரையாற்றவுள்ளனர்.
அத்துடன், காத்தான்குடி நகர சபை நூலகர் க.ருத்ரகுமார், தினக்குரல் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் ஆர்.பாரதி ‘ஆகவே’ ஜபார், தொழில்சார் இணைய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் பெர்டி ஹமகே ஆகியோரும் உரையாற்றவுள்ளனர்.
நிகழ்வின் நிறைவாக கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளர் நன்றியுரையாற்றவுள்ளார்.
குறித்த கட்டுரைத் தொகுப்பில்,
1. சிவராம் – பன்முக ஆளுமை – பேராசிரியை சித்திரலேகா மௌனகுரு,
2. சிவராம் நினைவெழுதல் – பேராசிரியர் உ.சேரன்
3.ஆய்வறிவுப் புலமை மிகுந்த ஊடகவியலாளன் – பேராசிரியர் சி. மௌனகுரு
4. சிவராமும், மட்டக்களப்பு வாசகர் வட்டமும் – ப.மகாதேவா
5. பத்திரிகையாளர் டி.சிவராம் ஒரு சிறு நினைவுக் குறிப்பு – எஸ்.கே.விக்னேஸ்வரன்
6. பூகோள அரசியலில் ஈழத் தமிழர் நலன்கள் சிவராமின் புரிதலும் வெளிப்படுத்தலும் – பேராசிரியர் சி. ரகுராம்
7. தராக்கியின் ஊடகவெளியும் தமிழர் சமூகவெளியும் – தெ.மதுசூதனன்
8. ஊடகப் போராளியான உண்மைப் போராளி – வீ.தேவராஜ்
9. எனது பார்வையில் சிவராம் – நிலாந்தன்
10. இலங்கையில் வாழ்வதே அர்த்தமுள்ள வாழ்வு – இரவி அருணாசலம்
11. இங்கே சாகாமல் நான் வேறு எங்கே சாவேன்? – வீரகத்தி தனபாலசிங்கம்
12. சிவராம் – ஒரு நினைவுக் குறிப்பு – கலாநிதி சர்வேந்திரா தர்மலிங்கம்
13. சிவராமின் படுகொலையும் தண்டனையிலிருந்து தப்பித்தலும் – பாரதி இராஜநாயகம்
14. ‘துரோகம் – தியாகம்’ இருநிலை அடையாளத்தின் வரலாறு ‘தராக்கி சிவராம்’ – சிவராசா கருணாகரன்
15. சிவராமின் குரல் – சிறிதரன் சோமீதரன்
16. மறுவாசிப்பில் சிவராம் ஒரு பிராரம்ப வரைவு – ச. அமரதாஸ்
17. சிவராமின் தீர்க்க திரிசனம் செயற்படுத்தத் தவறிய தமிழ்த் தேசியக் கட்சிகள் – அ.நிக்ஸன்
18. சமூகங்களைத் தட்டி எழுப்பிய ஊடக சிற்பி சிவராம் – க. குணராசா
19. கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் – பூபாலரத்தினம் சீவகன்
20. சிவராமிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய அரசியல் பல உண்டு – இரா துரைரத்தினம்
21. தராக்கி சிவராமின் இற்றைத் தேவை – உலகத் தமிழர் ஆவண மையம்
22. மறக்க முடியாத மாமனிதன் – அ.சுகுமாரன்
23. சிவராம் ஒரு நிதர்சனம் – கலாநிதி எம்.பி.ரவிச்சந்திரா
24. சிவராம் மானுட விடுதலையின் மகத்துவம் மிக்க போர் வாள் – அகதித் தமிழன்
25. சிவராம் தமிழ் ஊடகத் துறையினதும் அரசியலினதும் வரலாற்று நாயகன் – பி.மாணிக்கவாசகம்
26. மாமனிதர் சிவராம் பலமும், பலவீனமும் – பா.அரியநேத்திரன்
27. ஊடகத் துறையில் ஒரு ஜாம்பவான் சிவராம் – என்.கே.துரைசிங்கம்
28. சிவராம் எனும் சிகரம் – கலாபூஷணம் ஏ.எல்.எம்.சலீம்
29. தென் தமிழீழம் தந்த தவப்புதல்வன் – வி.ரி.சகாதேவராஜா
30. பேனாவை ஆயுதமாக்கிய ஊடகப் போராளி – எஸ்.கே.ராஜென்;
31. ஊடக முன்னோடிப் போராளி மாமனிதர் சிவராம் – பரா பிரபா
32. சிவராம் ஓர் ஊடக ஆளுமை – ஞா.குகநாதன்
33. அடிநுனியறியாப் பரம்பொருளாய் ஆனாய் நீயே – இரா தயாபரன்
34. தமிழ் ஊடகத் துறையின் தந்தை – வே.தவச்செல்வம்
35. சிவராமண்ணையும் நானும் – மகாமுனி சுப்பிரமணியம்
36. இருமுனைப் போராளி – சி.பிரபாகரன்
37. என்னுடன் தராக்கி – பிரசன்னா இந்திரகுமார்
38. Whom did I actually know? Sivaram or Taraki? – Kusal Perera
39. Sivaram, impunity, memorialization and dissent in mainstream media – Ruki Fernando
40. ‘Siva’ reloads with words – Johan Mikaelsson
41. In memory of our loving appa – Vaishnavi, Vaitheki & Seralathan