ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
குறித்த விஜயம் எதிர்வரும் வாரத்தின் முதல் நாட்களில் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் இந்தியாவிடமிருந்து பெறப்பட்ட அழைப்பின் அடிப்படையிலேயே குறித்த பயணம் அமைவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விஜயத்தில் பிரதமர் உட்பட பல இராஜதந்திர அதிகாரிகள் கலந்துகொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.