8 விக்கெட்டுக்களால் இலங்கை அணி வெற்றி!

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையில் நேற்று (07) இடம்பெற்ற உலக கிண்ண தகுதிகாண் சூப்பர் சிக்ஸ் போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணித்தலைவர் தசுன் ஷானகா முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தார்.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 48.1 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களை இழந்து 243 ஓட்டங்களை பெற்றது.

மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் கேசி கார்ட்டி அதிகபட்சமாக 87 ஓட்டங்களை பெற்றார்.

பந்துவீச்சில் இலங்கை அணி சாா்பில் மஹீஸ் தீக்சன 04 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.

இதன்படி இலங்கை அணிக்கு வெற்றியிலக்காக 244 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது.

அதன்படி, பதிலுக்கு களம் இறங்கிய இலங்கை அணி 44.2 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

இலங்கை அணி சார்பில் பெதும் நிஸ்ஸங்க 113 பந்துகளில் 14 நான்கு ஓட்டங்களுடன் 104 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

திமுத் கருணாரத்ன 83 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

 

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply