முட்டை, கோழி இறைச்சி விலைகளில் ஏற்படவுள்ள மற்றம்!

முட்டை மற்றும் கோழி இறைச்சி என்பவற்றின் விலைகள் குறையும் சத்தியம் உள்ளதாகவும் அடுத்த 2 மாதங்களுக்குள் இது தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட கால்நடை மேம்பாட்டுத் துறை இராஜாங்க அமைச்சர் டி.பி. ஹேரத் தெரிவித்துள்ளார்.

மேலும் , அண்மைக்காலமாக டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட கணிசமான வளர்ச்சியின் காரணமாக பல பொருட்களின் விலைகள் குறைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், சந்தையில் இதுவரை எந்தவொரு பொருட்களின் விலையும் குறைவடையவில்லை எனவும் இன்னும் பழைய விலையிலேயே பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுவருவதாகவும் மக்கள் குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply