ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்சவை பிரதிநிதித்துவப்படுத்தும் அணியின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்காகவே அரசாங்கம் மாகாண அமைச்சர்களை நியமிக்க தயாராகி வருவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
தேவையான சந்தர்ப்பங்களில் மாகாண அமைச்சர்கள் அமைச்சரவையின் கூட்டங்களில் கலந்துகொள்ள கூடிய வகையில் இந்த நியமனங்களை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
மேலும் நியமிக்கப்படும் மாகாண அமைச்சர்களுக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சருக்கு இருக்கும் சகல அதிகாரங்கள் மற்றும் சிறப்புரிமைகளையும் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கம் இதற்கு முன்னர் மாவட்ட அமைச்சர்களை நியமிக்க தயாரான போதும் அது வெற்றியளிக்கவில்லை.
இந்த அணியினர் கடந்த காலம் முழுவதும் தமக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பதவிகளை வழங்குமாறு கோரி வந்தனர். எனினும் அரசாங்கம் அந்த கோரிக்கையை நிறைவேற்றவில்லை.
இதன் காரணமாக இந்த அணியினர் அரசாங்கத்துடன் முரண்பாடுகளுடன் செயற்படும் விதத்தை காணக்கூடியதாக இருந்தது.
இந்த நிலையில், இவர்களை திருப்திப்படுத்துவதற்காக மாகாண அமைச்சர் பதவிகளை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.