அம்பன்பொலவில் யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கண்டெய்னர் மீது மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 29 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ளது.
குரகல புராதன பௌத்த மடாலயத்திற்குச் சென்றுவிட்டு வீடு திரும்பும் யாத்ரீகர்கள் குழுவொன்றை ஏற்றிக் கொண்டு பேருந்து பயணித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர்கள் தலாவ பகுதியைச் சேர்ந்த 32, 71 வயதுடையவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
காயமடைந்தவர்களில் 6 பெண்கள் மற்றும் ஒரு ஆண் அபன்பொல வைத்தியசாலையிலும் மேலும் 18 பெண்களும் 4 ஆண்களும் கல்கமுவ வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.