மன்னம்பிட்டிய பயணிகள் பேருந்து விபத்து- பலி எண்ணிக்கை அதிகரிப்பு

மணம்பிட்டிய, கொட்டாலிய பாலத்தில் நேற்று இரவு பயணிகள் பேருந்து ஒன்று மோதி ஆற்றில் கவிழ்ந்ததில் மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, விபத்தில் காயமடைந்த மேலும் 41 பேர் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலன்னறுவையிலிருந்து காத்தான்குடி நோக்கிப் பயணித்த பேருந்து ஒன்று மானம்பிட்டியவில் உள்ள கொட்டாலியப் பாலத்தில் மோதி நேற்று இரவு ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

பயணிகளை ஏற்றிச் செல்வதற்கான செல்லுபடியாகும் அனுமதிப்பத்திரம் சாரதியிடம் இல்லை எனவும், அதற்கு பதிலாக கிழக்கு மாகாண சபையினால் வழங்கப்பட்ட சட்டப்பூர்வமற்ற அனுமதிப் பத்திரத்தைப் பயன்படுத்தியதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

பேருந்தில் பயணம் செய்த பயணி ஒருவர், பேருந்தில் சுமார் 50 பேர் பயணம் செய்ததாகவும், ஏறக்குறைய 10 பேர் நின்று கொண்டிருந்ததாகவும், பேருந்து அதிவேகத்தில் சென்று பாலத்தை நெருங்கியதும் திடீரென நின்று, உடனே ஆற்றில் விழுந்ததாகவும், முதலில் வெளியே வந்தவர்களில் நானும் ஒருவன் எனவும், 5 – 10 நிமிடங்களில் பொலிஸார் அந்த இடத்திற்கு வந்ததாகவும் பெரும்பாலான பயணிகள் மயக்கமடைந்தனர் எனவும் தெரிவித்தார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply