இலங்கையை வழிக்கு கொண்டு வரும் வாய்ப்பு இந்தியாவிடமே – விடுக்கப்பட்ட வலியுறுத்தல்!

வல்லரசு என்ற வகையில்  இலங்கை மீது அழுத்தங்களைப் பிரயோகித்து வழிக்குக் கொண்டு வரும் வாய்ப்பு இந்தியாவிற்குள்ளது என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழர்கள் விடயத்தில் இந்தியா காத்திரமான முடிவை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி யாழில் உள்ள இந்திய துணைத் தூதரக அதிகாரிகளிடம் இந்திய பிரதமர் மோடிக்கு  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால்  மகஜர் ஒன்று  கையளிக்கப்பட்டுள்ளது.

அதன்பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

75 வருடங்களாக தமிழர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைக்கான தீர்வு ஒற்றையாட்சிக்குள் எட்டப்பட முடியாது.

எனவே தீர்வு தொடர்பில் அழுத்தங்களை இந்தியா மேற்கொள்ள வேண்டும்  என வலியுறுத்தல் விடுத்துள்ளார்.

மேலும், இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்தியாவிற்குச் சென்று இந்தியப் பிரதமரைச் சந்திக்கவுள்ளார்.

இலங்கை பொருளாதார ரீதியாக பாதாளத்தில் வீழ்ந்துள்ள நிலையில் இந்தியா பெருமளவு உதவிகளை வழங்கியிருக்கின்றது.

சர்வதேச நாணய நிதியத்திடம் விரைவாக  கடனைப் பெறுவதில் இந்தியா உதவி புரிந்துள்ளது.

வல்லரசு என்ற வகையில்  இலங்கை மீது அழுத்தங்களைப் பிரயோகித்து வழிக்குக் கொண்டு வரும் வாய்ப்பு இந்தியாவிற்குள்ளது.

இனப்பிரச்சினைக்குத் தீர்வு என்ற வகையிலே 36 வருடங்களுக்கு முன் கொண்டுவரப்பட்ட 13 ஆம் திருத்தச்சட்டம் தமிழர்களுக்கான தீர்வின் ஆரம்பமுமல்ல தீர்வுமல்ல என்பதைத் மகஜரில் தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை 13 ஆம் திருத்தச்சட்டத்தில் மாகாணசபைக்கு அதிகாரங்கள் உண்டென அதிகாரங்களை உபயோகிக்க முற்பட்டபோது நாட்டின் பல்வேறு நீதிமன்றத்தில் தொடரப்பட்ட 30 க்கு மேற்பட்ட  வழக்குகளில் தீர்ப்பளிக்கப்பட்டது.

இச்சட்டம் கொண்டுவரப்பட்ட காலத்திலுள்ள நிலைமையை விட மிக மோசமான அடக்குமுறைக்குள் தான் தமிழர்களின் இன்றையநிலையுள்ளது.

குறித்த சட்ட மூலத்தை தமிழர்கள்  ஏற்றுக்கொள்ளுமிடத்து ஒற்றையாட்சியை ஏற்றுக்கொண்டதாக இலங்கை அரசு கருதி, இனப்படுகொலை ஏற்படவில்லையென சர்வதேசத்திற்கு எடுத்துக்கூற வழிகாட்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்த வகையில் 1989  ஆம் ஆண்டு இந்தியாவின் தலைமையில் நடைபெற்ற திம்பு மாநாட்டில்  வலியுறுத்தப்பட்ட தமிழ்த் தேசம், இறைமை, சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட  அடிப்படையிலான  சமஸ்டித் தீர்வை எட்டுவதற்கு இந்திய அரசு இலங்கைக்கு அழுத்தங்களைப்  பிரயோகிக்க வேண்டும் என சுட்டிக்காட்டியு்ளளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேனை, ஏனைய தமிழ்க் கட்சிகளின் நிலைப்பாட்டை ஏற்கனவே நிராகரித்து வந்துள்ளோம்.  13 ஆம் திருத்தச் சட்டத்தில் மாகாணசபைக்கு அதிகாரங்கள் உண்டென அதிகாரங்களை உபயோகிக்க முற்பட்ட போது நாட்டின் பல்வேறு நீதிமன்றத்தில் தொடரப்பட்ட 30 க்கு மேற்பட்ட  வழக்குகளில் தீர்ப்பளிக்கப்பட்டது

13 ஆம் திருத்தச்சட்டத்தை ஆதரித்தால் மக்கள் மத்தியில் எதிர்ப்பை சம்பாதிக்க நேரிடும் என்பதால்  நடைமுறைப்படுத்தல் என்ற வார்த்தையை தந்திரோபாயமாக உபயோகித்து வருகின்றனர்.

ஏனைய தரப்புகள் இந்தியாவின் நலனுக்காகவும் தேவைக்காகவும் இச்சட்டத்தை தீர்வாக வலியுறுத்தும் அடிப்படையில் தமிழ் மக்களின் பெயரால் வலியுறுத்துகின்றார்கள்.

இதேவேளை சம காலத்தில் மீனவர் பிரச்சினைகள் தொடர்பாக பேசப்படுகின்றது. இது தொடர்பில் கடந்த காலங்களில் போராட்டங்கள் போன்ற நடவடிக்கைளில் ஈடுபட்டதுடன் தற்போதும் அப்பிரச்சானைகள் தொடர்பான தீர்வுகளில் கரிசனையாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply