நாடாளுமன்றத்தின் நிலையியல் கட்டளைக்கு அமைவாக சரத் வீரசேகர தெரிவித்த கருத்தை ஹன்சார்ட்டிலிருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்தி நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையிலும், நீதிபதியை அச்சுறுத்தும் விதமாகவும் சரத் வீரசேகர தெரிவித்த கருத்தையே நீக்குவது தொடர்பில் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமன்றி, நீதிபதி தொடர்பில் தனிப்பட்ட விமர்சனம் முன்வைக்க முடியாது எனவும் சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆகவே அடுத்த அமர்வில் சரத் வீரசேகர தெரிவித்த கருத்தை ஹன்சார்ட்டிலிருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.
இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர வெளியிட்டுள்ள கருத்துக்களை வன்மையாக கண்டிப்பதாக தமிழ் தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கண்டனங்களை வெளியிட்டுள்ளனர்.
குருந்தூர் மலை விவகாரத்தில் தமிழ் நீதிபதியொருவரின் தலையீட்டை வாய்ப்பாக பயன்படுத்தி, சிங்கள மக்கள் மத்தியில் இனவெறியை தூண்டிவிடுவதற்கே சரத் வீரசேகர முயற்சிக்கின்றார் எனவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.