கடை ஒன்றின் பின்னால் 2000 அதிகமான போதை மாத்திரைகளை மறைத்துவைத்த நபர் கைது!

ரத்தொலுவ வீடமைப்புத் திட்டத்தில் போதை மாத்திரைகளையும் கொக்கெய்ன் போதைப்பொருளையும் வைத்திருந்த 37 வயதான நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு சொந்தமான கடை ஒன்றின் பின்னால் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 26 கிராம் கொக்கெய்ன் மற்றும் 2,250 போதை மாத்திரைகள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே குறித்த போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

குறித்த சந்தேக நபரை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதை அடுத்து குறித்த நபரை ஜூலை 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply