நாட்டில் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் கருத்து வெளியிட்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள ராஜாங்கனே சதாரதன தேரரை பிணையில் விடுவிக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, அவர் 500,000 ரூபாய் மதிப்பிலான இரண்டு சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
நாட்டின் மத நல்லிணக்கத்திற்கு பாதகமான சில கருத்துக்களை சதரதன தேரர் வெளியிட்டதாக ஆனந்த சாகர தேரர் தனது முறைப்பாட்டில் குற்றம் சாட்டியதை அடுத்து கடந்த மே மாதம் 28 ஆம் திகதி குற்றப் புலனாய்வு பிரிவினரால் அனுராதபுரத்தில் வைத்து சதாரதன தேரர் கைது செய்யப்பட்டார்.