தமிழருக்கான அரசியல் தீர்வாக ஒருபோதும் 13ஆம் திருத்தத்தை ஏற்றுக்கொள்ள முடியாது!

இலங்கை அரசாங்கத்திற்கு 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த  அழுத்தம் பிரயோகிக்குமாறு இந்தியப் பிரதமருக்கு, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியும், தமிழ் மக்கள் கூட்டணியும் இணைந்து எழுதிய கடிதம் இன்று இந்தியத் தூதுவரிடத்தில் கையளிக்கப்படவுள்ளது.

இந்த நிலையில், இதுதொடர்பாக கருத்து வெளியிட்ட ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சித் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன், 13 ஐ தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வாக ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது எனத் தெரிவித்தார்.

மேலும், இலங்கைக்கு அழுத்தங்களை பிரயோகிக்கும் தார்மீகப் பொறுப்பு இந்தியாவுக்கு இருக்கும் காரணத்தினாலேயே குறித்த கடிதத்தை தயார் செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்தோடு, 13 இற்கு அப்பாற் சென்று, இனப்பிரச்சினைக்கு தீர்வுக்காணும் வகையில் எந்தத் தரப்பேனும் அரசியல் தீர்வை முன்வைத்தால், அதற்கு ஆதரவை வழங்க தங்களின் தரப்பு தயாராகவே உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply