கோடிக்கணக்கில் பண மோசடி செய்த பெண் கைது!

கட்டுமான பணிகளை மேற்கொள்வதாக  கூறி கோடிக்கணக்கில் பண மோசடி செய்த 35 வயதுடைய பெண் ஒருவர் கொழும்பு, பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

கொலன்னாவ பகுதியில் அமைந்துள்ள  கந்தவாக்க எனும் இடத்தில்  இரண்டு மாடிக் கட்டடம் ஒன்றை நிர்மாணிப்பதாகக் கூறி 57 இலட்சம் ரூபா பெற்றுக் கொண்டு தன்னை ஏமாற்றியுள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் பெண் ஒருவர் செய்த முறைப்பாட்டையடுத்து குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண், ஹொரணை, களுத்துறை மற்றும் பல பிரதேசங்களிலும் பண மோசடி செய்துள்ளதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபருக்கு நிலையான முகவரி இல்லாத நிலையில் , வேறு ஒருவர் மூலமே  கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவுக்கு அழைக்கப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட  பின்னர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில்  கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர்  மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply