இலங்கையின் சர்வதேச விமான நிலையங்களில் தரை கையாளுதல், உணவு சேவை மற்றும் விமான எரிபொருள் விநியோக நடவடிக்கைகளில் தனியார் துறைக்கும் வாய்ப்பு வழங்க இலங்கை அனுமதியளிக்கும் என சிவில் விமான சேவைகள் பணிப்பாளர் நாயகம் பி.ஏ.ஜெயகாந்த ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.
இந்த வார தொடக்கத்திலேயே இலங்கை விமான நிலையங்களில் எரிபொருள் விநியோகத்தை தாராளமயமாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.
இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்துடன் கையொப்பமிடப்பட்டுள்ள வேலைத்திட்டத்திற்கு அமைவாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட அரச நிறுவனங்களை சீர்திருத்துவதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.