ஜப்பானில் புதிய பழம் அறிமுகம்

உலக மக்கள் இதுவரை ருசி பார்க்காத புதிய வகைப் பழத்தை ஜப்பானிய விவசாயிகள் குழு வெளியிட்டுள்ளனர்.

முதன்முறையாக சந்தையில் வெளியிடப்பட்டுள்ள இந்த பழம் எலுமிச்சை தர்பூசணி என்னும் பெயரில் அழைக்கப்படுகின்றது.

எலுமிச்சை மற்றும் தர்பூசணி செடிகளை இணைத்து இந்த கலப்பினப் பழத்தை உற்பத்தி செய்வதில் ஜப்பானிய விவசாயிகள் வெற்றி பெற்றுள்ளனர்.

இந்தப் புதிய பழத்தை உண்பவர், புளிப்புத் தன்மையுடன் கூடிய இனிப்பை உணர்வார் என்று ஜப்பானிய விவசாயிகள் கூறுகின்றனர்.

ஜப்பானிய சந்தையில் இந்த பழத்தின் விலை 23.30 அமெரிக்க டொலர்கள்  ஆகக் காணப்படுகின்றது.

இலங்கை விலையில்  இது 7000 ரூபாவாகும்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply