எல் நினோ தாக்கத்தால் உலகின் பெரும்பாலான பகுதிகளில் வெப்ப நிலை தொடர்ந்து உயர்வடைந்து வருகின்றது.
இந்த நிலையில் கடந்த ஜூன் மாத்திலேயே அதிகளவு வெப்பம் பதிவாகியுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.
ஜூன் 2023-க்கான உலகளாவிய சராசரி வெப்பநிலை 1951 முதல் 1980 ஜூன் வரையிலான சராசரியை விட 1.07 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்ததாக நாசா தெரிவித்துள்ளது.
இது, மனித நடவடிக்கைகளின் விளைவாகவும், முக்கியமாக கார்பன் டை ஒக்சைட் உமிழ்வுகளின் விளைவாகவும், அதிகரித்து வரும் உலகளாவிய வெப்பநிலையின் ஒரு பகுதி என நாசா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.