சீன அரசியலின் முக்கிய புள்ளி இலங்கைக்கு விஜயம்!

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுவின் அரசியல் குழு உறுப்பினர் யுவான் ஜியாஜூன் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 நாள் உத்தியோகபூர்வ விஜயமாக நாளை மறுதினம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை மறுதினம் முதல் எதிர்வரும் 23ம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பார் என சீன தூதரகம் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

யுவான்ஜியாஜுன் சீனாவில் சோங்கிங் நகர சபையின் செயலாளர் என்பதுடன், சீன அரசியலிலும் அவர் முக்கிய பங்கு வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply