தோட்ட வேலையிலிருந்து, ஒய்வு பெற்ற வயோதிபப் பெண் ஒருவர் குளவிக் கொட்டுக்கு இலக்காகி இன்று காலை 10 மணியளவில் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாகசேன பம்பரகலை எனும் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
நாசேனை பம்பரகலை மத்திய பிரிவு தோட்டத்தை சேர்ந்த 80 வயதுடைய காளிமுத்து மாரியாய் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தோட்ட தொழிலில் இருந்து ஓய்வு பெற்ற இவர் நாள் சம்பளத்திற்காக தேயிலை கொய்யும் பணியில் ஈடுப்பட்டிருந்த போது குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளார்.
இதேவேளை, தாக்கப்பட்ட பெண் லிந்துலை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.