தனஞ்சய டி சில்வா சதம் – முதல் இன்னிங்ஸில் 312 ஓட்டங்களை குவித்தது இலங்கை!

பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 312 ஓட்டங்களை பெற்றுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் ஆடிய அந்த அணி சற்று முன்னர் சகல விக்கட்டுக்களையும் இழந்து 312 ஓட்டங்களை பெற்றது.

இலங்கை அணி சாா்பில் அதிகபட்சமாக தனஞ்சய டி சில்வா 122 ஓட்டங்களையும் அஞ்சலோ மத்யூஸ் 64 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்து வீச்சில் பாகிஸ்தான் அணி சாா்பில் ஷஹீன் ஷா அப்ரிடி, நசீம் ஷா மற்றும் அப்ரார் அகமட் ஆகியோர் தலா 3 விக்கட்டுக்களை வீழ்த்தினர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply