கெசல்கமுவ ஓயாவில் இன்று காலை பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டதாக நோர்வூட் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
சென்ஜோன் டிலரி தோட்ட கீழ் பிரிவில் உள்ள 56 வயதுடைய குமரேசன் தனலெட்சுமி என்ற மூன்று பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்த பெண்ணின் கணவர் நோர்வூட் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டை அடுத்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் கெசல்கமுவ ஓயாவிலிருந்து குறித்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சடலத்தை பார்வையிட்ட ஹட்டன் நீதிமன்ற நீதவான் சடலத்தை கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல உத்தரவிட்டுள்ளதுடன் , சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் சடலம் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் நோர்வூட் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.