மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரைக் கடத்திய குற்றச்சாட்டுக்குள்ளான அட்மிரலுக்கு உயர்ஸ்தானிகர் பதவி!

பாகிஸ்தானுக்கான உயர்ஸ்தானிகராக அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு முன்னர் கடற்படைத் தளபதியாகவும் பாதுகாப்பு படைகளின் பிரதானியாகவும் செயற்பட்டுள்ளார்.

குறித்த பதவிகளில் இருந்து ஓய்வு பெற்றதன் பின்னர், அவர் பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளராகவும் கடமையாற்றியிருந்தார்.

இவர், கொழும்பு மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வெள்ளை வானில் 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரைக் கடத்­திய விவ­கா­ரத்தில் பிர­தான சந்­தேக நபர் நேவி சம்பத்திற்கு அடைக்­கலம் கொடுத்­தமை தொடர்பில் குற்­றச்­சாட்­டுக்கு உள்­ளா­கி­  கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 28 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply