கொலம்பியாவில் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
உயரிழந்தவர்களில் 5 அரசியல்வாதிகளும் ஒரு விமானியும் அடங்குவர்.
முன்னாள் ஜனாதிபதி அல்வாரோ யூரிப்பின் வலது சாரி கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள், கடந்த புதன்கிழமை பொகோடா என்ற இடத்தில் நடைபெற்ற கட்சி கூட்டத்திற்காக பயணித்துக்கொண்டிருந்தவேளை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
கொலம்பியாவின் சான் லூயிஸ் டி காசினோ என்ற பகுதியில் பயணித்துக்கொண்டிருந்தபோது விமானம் விழுந்து நொறுங்கியது.
விபத்து குறித்தான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக அந்நாட்டு சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.