தொடர்ந்தும் சீண்டினால் மீண்டுமொரு மக்கள் கிளர்ச்சி வெடிக்கும் – சரத் வீரசேகரவிற்கு எச்சரிக்கை!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தற்போது ஒரு மனநோயாளி போன்று உலாவிக்கொண்டிருப்பதாக ஜனநாயக தமிழ்த்தேசிக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் நாடாளமன்றில் இடம்பெற்ற வங்கித்தொழில் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“எங்களுடைய மக்கள் பல போராட்டங்களை பார்த்தவர்கள் அவர்களை சீண்ட வேண்டாம். உங்களுடைய கதைகளை உங்களோடு வைத்துக்கொள்ளுங்கள்.

ஊடகங்கள் இவருக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது. அகவே எங்களது மக்களை தொடர்ந்து சீண்டிப் பார்க்க வேண்டாம்.

இங்கு சரத் வீரசேகரவுக்கு நான் சவால் விடுகிறேன். மீண்டும் மீண்டும் எங்களது மக்களை சீண்டுவீர்களாக இருந்தால் எங்களது மக்கள் மீண்டும் கிளர்ந்தெழக்கூடிய நிலைமை ஏற்படும்.

தமிழ் மக்களை தொடர்ச்சியாக சீண்டும் வகையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவின் கருத்துக்கள் காணப்படுகின்றன.

இவரை சபையிலிருந்து வெளியேற்ற வேண்டும். அத்துடன் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த முடியாது என நாடாளுமன்றத்தில் சரத் வீரசேகர தெரிவித்திருந்தார்.

இவ்வாறு தெரிவிப்பதன் மூலம் அவரும் இந்த அரசியல் சாசனத்தை மீறி செயற்படுவதாகவே நாம் கருதுகின்றோம்.

அத்துடன் குருந்தூர் மலையில் இந்து மதங்கள் தொடர்பான வழிபாடுகள் மேற்கொள்வதற்கு தடை விதிப்பதற்கு இவர் யார்? நாட்டை பொருளாதார பிரச்சனையிலிருந்து மீட்டெடுப்பதற்கு உதவிய நாடுகளை தற்போது சாடுகின்றார் இது எந்த விதத்தில் நியாயம்? இந்த நிலையில் தான் கூறுகின்றேன் சரத் வீரசேகரக ஒரு மனநோயாளி எனவே அவரை இந்த சபையிலிருந்து நீக்க வேண்டும்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply