டுவிட்டர் தளம் X என்ற பெயரில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக எலான் மஸ்க் அதிரடி அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.
இது எல்லாவற்றுக்குமான செயலியாக இருக்கும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த அதிரடி அறிவிப்பானது இன்று காலை விடுக்கப்பட்டுள்ளது.
புதிய மாற்றம் விரைவில் அமலுக்கு வர இருப்பதை அடுத்து, பயனர்கள் புதிய லோகோவுக்கு தயாராகும் படி எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து X.com என்ற வலைதள முகவரியை அழுத்தினால், தற்போது டுவிட்டர் தளத்திற்கு செல்லமுடியும்.
இதனையடுத்து, twitter.com என்ற வலைத்தள முகவரியும் x.com என்றவாறாக மாற்றப்படுமா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
இதோடு டுவிட்டர் தளத்துக்கான புதிய லோகோ இப்படித் தான் காட்சியளிக்கும் என்று எலான் மஸ்க் நேற்று தெரிவித்ததோடு,மற்றொரு டுவிட்டர் பதிவில் அவர் புதிய டுவிட்டர் லோகோவை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.