முதல் இன்னிங்ஸில் 166 ஓட்டங்களில் சுருண்ட இலங்கை அணி!

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது.

இன்றைய போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து தமது முதல் இன்னிங்ஸில் 48.4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 166 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அணிசார்பில் அதிகபடியாக தனஞ்சய டி சில்வா 57 ஓட்டங்களையும், தினேஷ் சந்திமால் 34 ஓட்டங்களையும், ரமேஷ் மெண்டிஸ் 27 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

துடுப்பாட்டத்தில் சோபிக்க தவறிய இலங்கை அணியின் ஏனைய வீரர்கள் 20 க்கும் குறைந்த ஓட்டங்களையே பெற்றனர்.

பந்துவீச்சில் பாகிஸ்தான் அணியின் நஷீம் ஷா 41 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இந்தநிலையில், பாகிஸ்தான் அணி தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடி வருகின்றது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply