பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை இன்றே கைது செய்து ஆஜர்படுத்துமாறு பாகிஸ்தான் பொலிஸாருக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் குறித்து அவதூறாக பேசியதாக இம்ரான் கான் உள்ளிட்ட தெக்ரீக்-இ-இன்சாப் கட்சி நிர்வாகிகள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பலமுறை அழைப்பாணை விடுக்கப்பட்ட போதிலும், தேர்தல் ஆணையத்தின் முன்பு இம்ரான் கான் ஆஜராகவில்லை.
இந்நிலையில், இம்ரான் கானை கைது செய்து தேர்தல் ஆணையத்தின் முன் இன்று ஆஜர்படுத்துமாறு இஸ்லாமாபாத் பொலிஸாருக்கு தேர்தல் ஆணையம் நேற்று உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.