கோட்டை ரயில் நிலையம் எதிரே போராட்டம் நடத்திய தொழிற்சங்கத்தினர் 

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக பல தொழிற்சங்கங்கள் இணைந்து தற்போது ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

இதனால், காலி முகத்திடல் நுழைவு வீதி லோட்டஸ் வீதி சந்தியில் இருந்து போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இன்று கொழும்பு கோட்டையின் சில பகுதிகள் மற்றும் வீதிகளுக்குள் பல தொழிற்சங்கங்கள் பிரவேசிப்பதைத் தடுத்து கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி இல்லம், நிதியமைச்சு, இலங்கை மத்திய வங்கி, ஒல்காட் மாவத்தை, யோர்க் வீதி, வங்கி வீதி, லோட்டஸ் வீதி, சத்தம் வீதி போன்றவற்றிற்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழைவதும், பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்துவதும் தடுக்கப்பட்டது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply