கோட்டாபயவிற்கு வழங்கிய ஆணையையே ரணில் செயற்படுத்த வேண்டும் – சர்ச்சை பேச்சில் சோபித தேரர்!

இலங்கை அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தினால் தென்னிலங்கையில் வீண் முரண்பாடுகள் தோற்றம் பெறும் எனவும் நாட்டின் சட்டம் மற்றும் ஒழுங்குக்கு பாதிப்பு ஏற்படும் எனவும் மக்கள் பேரவையின் தலைவர் ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதிக்கும், நாடாளுமன்றத்துக்கும் மக்கள் ஆணை கிடையாது. அவ்வாறு இருக்கும் போது, அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை எவ்வாறு ஜனாதிபதி நடைமுறைப்படுத்துவார் என்பதை தாங்களும் பார்த்துக் கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

13 ஆவது திருத்த சட்டம் நடைமுறைப்படுத்துவது தொடர்பில் மக்களிடம் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்சவுக்கு வழங்கிய மக்களாணைக்கு அமையவே ரணில் விக்ரமசிங்க செயற்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தவதாக சுபீட்சமான எதிர்கால கொள்கை திட்டத்தில் குறிப்பிடப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகியதை தொடர்ந்து இடைக்கால ஜனாதிபதியாகவே ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டார்.

ஆகவே, அவர் தன்னிச்சையாக முடிவு எடுக்க முடியாது கோட்டாபயவிற்கு வழங்கிய ஆணைக்கமையவே அவர் செயற்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

தேசிய பொருளாதாரம், சட்டம் மற்றும் ஒழுங்கு ஆகியவற்றை பாதுகாப்பாதற்காகவே ரணில் விக்ரமசிங்கவை தெரிவு செய்தோம் என பொதுஜன பெரமுனவினர் குறிப்பிடுகிறார்கள்.

ஆகவே பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் இல்லாத பிரச்சினைகளைத் தோற்றுவிப்பதை ஜனாதிபதி தவிர்த்துக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

ஆகவே, 13ஆவது திருத்தம் தொடர்பில் நாட்டு மக்களே தீர்மானிக்க வேண்டுமென்றால் அதற்கு மக்கள் வாக்கெடுப்பு நடத்துவது அத்தியாவசியமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் வாக்கெடுப்பு ஒன்று நடத்தினால் முரண்பாடற்ற நிலையான தீர்வினை பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.

அதனை விடுத்து மக்கள் ஆணை இல்லாத தரப்பினர் எடுக்கும் தீர்மானம் நாட்டில் முரண்பாடுகளை மாத்திரமே தோற்றுவிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply