போட்டித்தன்மையுடன் உலக சந்தையில் நுழைய சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் அவசியமானவை என அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்றுமதி வர்த்தகத்தை ஊக்குவிக்க, போட்டித்தன்மையுடன் உலக சந்தையில் நுழைய சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் அவசியமானவை என்பதை உலகின் ஏனைய நாடுகளை போல, இலங்கையும் ஏற்றுக் கொண்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
இந்தியா, பாகிஸ்தான், சீனா, தாய்லாந்து, இந்தோனேசியா போன்ற நாடுகளுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களை செய்துகொள்ள தாம் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், இப்போது செய்து கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தங்களை எதிர்வரும் காலங்களில் செயற்படுத்தவும் தாம் தற்போது கலந்துரையாடல்களை நடத்திவருவதாகவும் தெரிவித்துள்ளார்.
அந்தவகையில், விரைவிலேயே இலங்கை தாய்லாந்துக்கு இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.